கொரோனா வைரஸ் பாதித்த வுஹானிலிருந்து பிரான்சிற்கு வரவிருக்கும் 200 பேர்: திகிலில் ஆழ்ந்துள்ள மக்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் தாக்கியுள்ள சீன நகரமான வுஹானிலிருந்து, 200 பேர் திடீரென பிரான்ஸ் வர இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, ஒரு நகரமே திகிலில் ஆழ்ந்துள்ளது.

பிரான்சிலுள்ள Carry-le-Rouet நகர பொலிசாரும் சுகாதாரத்துறை அலுவலர்களும், கொரோனா வைரஸ் பாதித்துள்ள வுஹானிலிருந்து பிரான்ஸ் வர இருக்கும் பிரெஞ்சு மக்களை தங்க வைப்பதற்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளனர்.

அந்த 200 பேரும் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை, அவர்கள் அங்கு இருப்பார்கள்.

ஆனால், நகர மக்கள் கடும் திகிலடைந்திருப்பதாக நகர மேயரான Jean Montagnac தெரிவித்துள்ளார்.

Photo: AFP

பதற்றமான நிலையில், தன்னை தொலைபேசியில் அழைக்கும் அவர்கள், தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டவண்ணம் இருப்பதாக தெரிவிக்கிறார்.

ஆனால், விமானத்தில் வந்துகொண்டிருக்கும் யாருக்கும் இதுவரை கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் இல்லை என பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அப்படி யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்றியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தால், யாரும் எட்ட முடியாத ஒரு இடத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார்கள், அதனால் பயமில்லை என்கிறார் மேயர் Montagnac.

Photo: AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers