பிரித்தானிய கடற்பகுதியில் நுழைய தடை: பிரான்ஸ் மீனவர்கள் கோபம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டைத் தொடர்ந்து பிரித்தானிய கடற்பகுதியில் நுழைய தங்கள் படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்டதால் பிரான்ஸ் மீனவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

ஆனால், இது தற்காலிகத் தடைதான் என்றும், மீண்டும் மீன்பிடிக்க அனுமதி தொடரும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Guernsey என்பது ஆங்கிலக் கால்வாயில் பிரெஞ்சு கரையோரம் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவாகும்.

இப்பகுதியில் நுழைவதற்கு பிரான்ஸ் படகுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி, ஐரோப்பிய மீன் பிடித்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது.

ஆனால் பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அதாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், ஜனவரி 31 இரவுடனேயே, தானாகவே அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.

இனி, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்படவேண்டியுள்ளது.

ஆனால், transition period முடியும் வரை, இப்போதைக்கு, அதாவது 2020 முடியும் வரை, பிரான்ஸ் மீனவர்கள் Guernsey பகுதியில் தடையின்றி மீன் பிடிக்கலாம். என்றாலும், Guernsey அதிகாரிகள், அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கு படகுகள் தனித்தனியாக அனுமதி பெறும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.

அந்த அனுமதிக்கான விண்ணப்பத்தை கோருவதற்குத்தான் சுமார் ஒரு வாரம் வரை தேவைப்படுகிறது என்று கூறியுள்ள அதிகாரிகள், அதுவரை பிரான்ஸ் படகுகள் Guernsey பகுதியில் நுழைய தற்காலிகமாக தடைவிதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அதன் பின், 2020 இறுதி வரை, பிரான்ஸ் மீனவர்கள் Guernsey பகுதியில் வழக்கம் போல மீன் பிடிப்பதை உற்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்