கொரோனோவால் பிரான்சில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? சுகாதார துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் சுகாதார துறை அமைச்சர் கொரோனோ வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் பரவி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து. இது அப்படியே வெளிநாடுகளில் பரவி வருகிறது.

சீனா மட்டுமின்றி உலகில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை பிரான்ஸில் இருக்கும், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் எத்துவார் பிலிப், சுகாதார துறை அமைச்சர் Agnès Buzyn உட்பட மேலும் சிலருடன் கொரோனா தாக்கம் தொடர்பான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பு காரணமாக, சுகாதார துறை அமைச்சர், Agnès Buzyn ஊடகங்களுக்கு கொரோனா தாக்குதல் தொடர்பாக சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

அதில், சீனாவில் இந்த கொரோனோ தாக்குதலில் மொத்தமாக 14,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 305 சீன நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனா தவிர்த்து உலகம் முழுவதும் 26 நாடுகளில் கொரோனோ வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 177 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பாவில் 23 பேருக்கும், பிரான்சில் 6 பேருக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த வியாழக்கிழமை ஆறாவது நபருக்கு கொரோனோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் எந்த ஒரு நோய் தாக்கமும் இல்லை.

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 180 பேரின் இரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. Carry-le-Rouet நகரில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் எதிர்மறையான (negative) முடிவே வந்துள்ளது என்று Agnès Buzyn தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்