நீங்கள் உங்கள் மீன்களில் பெரும்பாலானவற்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத்தான் ஏற்றுமதி செய்கிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம் என்று பிரித்தானியாவை பிரான்ஸ் மிரட்டியுள்ளது.
சமீபத்தில் பிரித்தானிய கடற்பகுதியில் மீன்பிடிக்க பிரான்ஸ் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அது தற்காலிகத் தடையாக இருந்தாலும், பிரெஞ்சு மீனவர்களை அது ஆத்திரமடையச் செய்தது.
இந்நிலையில், நாங்கள் எப்படி மீன் பிடிப்பதற்கு பிரித்தானிய கடற்பகுதிக்கு வந்தாகவேண்டுமோ, அதே போல அந்த மீனை விற்பதற்கு பிரித்தானியாவும் ஐரோப்பிய சந்தைக்கு வந்தாகவேண்டும் என்று கூறியுள்ளார் பிரான்சின் வெளியுறவு அமைச்சரான Jean-Yves Le Drian.
பெரும் மீன் வளமுள்ள பிரித்தானிய கடற்பகுதியில், பிரித்தனி, நார்மண்டி மற்றும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பிரெஞ்சு மக்கள் முதல் பல ஐரோப்பியர்கள் மீன் பிடிப்பதுண்டு.
ஆனால், அங்கு மீன் பிடிக்கும் பிரித்தானியா, 75 சதவிகிதம் மீனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத்தான் ஏற்றுமதி செய்கிறது என்கிறார் Jean-Yves Le Drian.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய transition period இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முடிவடைய இருப்பதால், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் சமமாக ஐரோப்பிய ஒன்றிய கடற்பகுதிகளில் மீன் பிடிக்கலாம் என்று கூறும் பொது மீன் பிடித்தல் கொள்கையும் முடிவுக்கு வருகிறது.
எனவே, இரு பக்கத்தினரும் மீன் பிடி உரிமை உட்பட பல உரிமைகளை தக வைத்துக்கொள்வதற்காக, வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முயல்வார்கள்.
இந்நிலையில்தான் பிரித்தானியாவை எச்சரித்துள்ள Jean-Yves Le Drian, பிரித்தானியா விதிகளை மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு நடந்துகொள்ளும் எண்ணத்தில் இருக்குமானால், அதற்கு நாங்கள் சம்மதிக்கமாட்டோம், காரணம், நீங்கள் எங்கள் சந்தைக்கு வரவேண்டுமானால் எங்கள் விதிகளை மதித்துதான் ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மீன் பிடி உரிமையை மீட்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான 47 ஆண்டு கால உறவை முடிப்பதனால் கிடைக்கும் பரிசுகளில் ஒன்று என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.