பயமாக இருக்கிறது! பிரான்சில் ஆசிய நாட்டு உணவகங்களை ஒதுக்கும் மக்கள்: சொன்ன முக்கிய காரணம்

Report Print Santhan in பிரான்ஸ்

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரான்சில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள் சில இதன் காரணமாக காலியாக உள்ளன.

சீனாவின் வுஹான் மற்றும் ஹுபே மாகாணத்தில் பரவி வரும், கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக, அங்கு தற்போது வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கிருக்கும் வெளிநாட்டினர் இதன் காரணமாக தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அப்படி சொந்த நாட்டிற்கு திரும்பும் மக்களுக்கு கொரோனோ வைரஸ் சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கொரோனோ வைரஸ் பாதிப்பு தொற்றியுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் ஆசிய உணவகங்கள்(குறிப்பாக சீனா உணவகங்கள்), ஆசிய மூலிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் அனைத்தும் பார்க்க காலியாக உள்ளன.

இதற்கு காரணம், கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சம் இருந்தாலும், ஒரு வகை இனவெறி தான் என்று அங்கிருக்கும் ஆசிய நாட்டினர் சிலர் கூறுகின்றனர்.

அவர்கள் கூறுகையில், இங்கு நிறைய வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. தலைநகர் பாரிசில் தான் அதிகளவில் சீனா நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏன் இங்கிருக்கும் கடைகளில் வாங்க மறுக்கிறீர்கள் என்று அங்கிருக்கும் பெண் ஒருவரிடம் கேட்ட போது, காய்கள், வீட்டு பொருட்கள் சிலவற்றை வாங்கினோம், ஆனால் இப்போது வாங்குவதில்லை, பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண், சீனாவில் இருந்து பேக் செய்யப்பட்ட பொருட்கள் இங்கு நிறைய வருகின்றன. அதை நாங்கள் வாங்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers