கொரோனா வைரஸ் பாதித்த வுஹானில் பிரெஞ்சு மருத்துவர் செய்து வரும் பாராட்டுதலுக்குரிய செயல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹான் இன்னமும் மூடப்பட்டுதான் இருக்கும் நிலையில், பிரான்ஸ் தனது குடிமக்களை சீனாவிலிருந்து அழைத்துக் கொண்டு வந்து விட்ட நிலையிலும், மருத்துவர் ஒருவர் வுஹானிலேயே இருப்பது என முடிவு செய்துள்ள விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வுஹான் சர்வதேச மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் Philippe Klein.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரான Philippe, தன்னை மீட்டுச் செல்ல தன் தாய்நாட்டிலிருந்து விமானம் வந்த போது, வுஹானுக்குத்தான் தனது சேவை அதிகம் தேவை என்று முடிவு செய்தார்.

குறைந்த எண்ணிக்கையிலான பிரான்ஸ் நாட்டவர்கள்தான் வுஹானிலிருப்பதாக தெரிவித்துள்ள Philippe, தனது மனைவியும் மகனும் பிரான்ஸ் அனுப்பிய இரண்டாவது விமானத்தில் பிரான்ஸ் சென்றுவிட்டதாக தெரிவிக்கிறார்.

அது தான் எடுத்த வித்தியாசமான முடிவு என்று கூறும் Philippe, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நான் வீட்டுக்கு செல்லும் போது, நிச்சயம் என்னுடன் நோய்க்கிருமிகளையும் கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்கிறார்.

அதனால் குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட வேண்டாம் என்று தான் அவர்களை அனுப்பிவிட்டதாக தெரிவிக்கிறார் அவர்.

ஆனால், ஒரு மருத்துவராக, நான் வுஹானிலிருப்பது தான் சரி என முடிவு செய்துவிட்டேன் என்கிறார் Philippe.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers