பாரீஸில் கடைசி அகதிகள் முகாமும் அகற்றப்பட்டது: மனித கழிவு நாற்றம் வீசியதாக புகார் கூறிய பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் சுமார் 266 கூடாரங்களில் அகதிகள் வாழ்ந்துவந்த கடைசி அகதிகள் முகாமும் அகற்றப்பட்டது.

சாலைகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக,நான்கு பெண்கள் உட்பட 427 பேர் பாரீஸிலிருந்த அகதிகள் முகாம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து, பாரீஸிலிருந்த கடைசி அகதிகள் முகாமும் காலி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதிக்குள்ளாக அனைத்து அகதிகள் முகாம்களையும் நகரத்திலிருந்து அகற்றுவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castaner உறுதியளித்திருந்தார்.

அவர்களில் கொஞ்சம் பேரை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காப்பகங்களில் அனுமதிப்பதும், புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதும் அவரது திட்டத்தில் அடக்கம்.

அதன்படி அகதிகள் முகாம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் 1,400க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர், வட பாரீஸிலிருந்த முகாம் ஒன்றிலிருந்து பொலிசாரால் அகற்றப்பட்டார்கள். அவர்களில் 93 பேர் சிறுவர்கள்.

தற்போது பாரீஸிலிருந்த கடைசி முகாமையும் காலி செய்துள்ள பொலிசார், அந்த முகாமில் குப்பை குவிந்து, எலிகள் அதிகம் காணப்பட்டதாகவும், எப்போதுமே மனிதக் கழிவுகளின் நாற்றம் அடித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் அதிகாரிகள் அகதிகள் முகாம்களை காலி செய்வதற்கு, அவை சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதாக இருந்ததாக காரணம் தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers