வெளிநாடு சிறையில் பிரான்ஸ் ஜோடிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பரிபா அதெல்காஹ், ரோலண்ட் மார்சல். ஆராய்ச்சியாளர்களான இருவரும் 60 வயது கடந்தவர்கள்.

கடந்த 38 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், பரிபா ஈரானுக்கு ஆராய்ச்சி ஒன்றின் நிமித்தம் சென்றுள்ளார். ஆனால் அவர் உளவு வேலை பார்த்ததாக ஈரானிய அரசால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டார்.

தகவல் அறிந்து அவரை பார்ப்பதற்காக ஈரான் சென்ற ரோலண்ட் மார்சலும் கைது செய்யப்பட்டார்.

பரிபா மீதான உளவு குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டாலும், இருவரும் ஈரான் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இருவரும் சிறையிலேயே உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர். இந்த தகவலை அவர்களின் வக்கீல் வெளியிட்டுள்ளார்.

அவர்கள் திருமணம் செய்து கொண்டு விட்டால் சிறையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச சட்ட ரீதியான அனுமதி கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து சிறைத்துறை அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers