பிரான்சில் பரவும் கோடிக்கணக்கான ஒபாமா புழுக்கள்: விவசாய நிலங்கள் பாதிப்பு அச்சம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் ஒபாமா புழுக்கள் என்னும் புழுக்கள் பல பில்லியன் கணக்கில் பரவிவருவதால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த தட்டைப் புழுக்கள் வேகமாக இனப்பெருக்க செய்யக் கூடியவை.

அத்துடன் அவை மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் போன்ற விவசாயத்திற்கு பயன்படும் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன.

மண் புழுக்கள் போன்ற உயிரினங்கள் விவசாய நிலத்திற்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த தட்டைப் புழுக்கள் அவற்றை உண்பதால் நில வளம் பாதிக்கப்படுகிறது. அதை விட மோசம், வேறெந்த உயிரினமும் இந்த புழுக்களை உண்பதில்லை.

பிரான்சின் 75 மாகாணங்களில் இந்த புழு பரவிவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இந்த புழுக்களை கொல்லும் அங்கீகரிக்கப்பட்ட எந்த ரசாயனமும் இல்லை. எனவே அவற்றைப் பிடித்து நசுக்கிக் கொன்று, எரித்து அழிப்பதைத் தவிர, அவற்றை அழிப்பதற்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.

மற்றொரு முக்கிய விடயம், Obama Nungara என்று அழைக்கப்படும் இந்த தட்டைப் புழுக்களுக்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers