நீங்கள் தனியாக இல்லை... பிரான்ஸ் ரயில்களில் பயணிக்கும் மனிதர்களல்லாத பயணிகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நீங்கள் தனியாக இல்லை என்பது புகழ்பெற்ற ஒரு வாசகம்... கமெராக்கள் பொதுமக்களை கண்காணிப்பது முதல் ராணுவம் உதவுவது வரை சில விடயங்களை குறிக்க அந்த வாசகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், பாரீஸ் மெட்ரோ ரயில்களைப் பொருத்தவரை, உண்மையாகவே அதில் பயணிப்பவர்கள் தனியாக இல்லை என்றே கூறலாம்.

காரணம், ரயில்களில் எலிகளும் பெருச்சாளிகளும் சர்வசாதாரணமாக நடமாடுகின்றன.

அவை பயணிகளை அவ்வப்போது பயமுறுத்துவது மட்டுமின்றி, ரயிலில் அமைக்கப்பட்டிருக்கும் ஒயர்களை கடித்துவிடுவதால் பெரும் தொல்லை.

ரயில்வே ஊழியர்கள் இந்த எலித்தொல்லையைக் குறைப்பதற்காக அவைகளுக்கு விஷம் வைக்கும் வேலையை ஒழுங்காக செய்துவருகிறார்கள்.

ரயிலுக்குள் எலித்தொல்லை என்றால், ரயிலுக்கு வெளியே குறிப்பாக சுரங்க ரயில் பாதைகளில் நரிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் மர நாய்களின் தொல்லை! ஆக, நீங்கள் தனியாக இல்லை என்ற வாசகம் இந்த விடயத்தில் பிரான்ஸ் ரயில்களுக்கும் பொருந்தும்தானே!

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்