இளைஞரை சுட்ட விவசாயிக்கு ஆதரவாக பேரணி சென்ற மக்கள்: செவிசாய்த்த நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இளைஞர் ஒருவரை சுட்ட விவசாயி ஒருவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணி செல்ல, அவர்களது கோரிக்கைக்கு செவிமடுத்து அந்த விவசாயி விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.

பிரான்சின் Reims நகரில், கைது செய்யப்பட்ட விவசாயி ஒருவரை விடுவிக்கக்கோரும் பதாகைகளுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர்.

Jean-Louis Leroux (46) என்ற அந்த விவசாயி, 19 வயது இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில், அந்த இளைஞர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதற்காகத்தான் பொலிசார் Lerouxஐ கைது செய்தனர்.

அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. Leroux, தனது பண்ணையில் நுழைந்து எரிபொருளை திருட முயன்ற அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

AFP

பல முறை இதேபோல் தனது பண்ணையில் திருட்டு நடந்துள்ளதாக தெரிவித்துள்ள Leroux, பல முறை பொலிசாருக்கு தகவலளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தான் நடவடிக்கையில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்கிறார்.

அவர் யாரையும் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படி செய்யவில்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் முன் குவிந்த விவசாயிகள், தாங்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல்பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார்கள்.

அதைத் தொடர்ந்து Leroux ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றாலும், அவர் மீது விசாரணை தொடரும்.

இந்நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த இளைஞர் கோமாவிலிருந்தாலும், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்