கசிந்த தவறான வீடியோ..! யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.. பாரிஸ் மேயருக்கான மக்ரோனின் வேட்பாளர் எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மேயருக்கான ஜனாபதிபதி இம்மானுவேல் மக்ரோனின் எல்.ஆர்.இ.எம் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக்ஸ், தான் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தவறான வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்ததின் விளைவாக மேயர் தேர்தலில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக பெஞ்சமின் கிரிவாக்ஸ் விலகியது பிரான்ஸ் ஜனாதிபதி கட்சிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த தவறான வீடியோவை முன்னாள் அரசாங்க செய்தித் தொடர்பாளரிடமிருந்து வெளியானதாக கூறப்படுகிறது. பின்னர் அது சமூக ஊடகங்களில் பரவியது.

வீடியோ பரவிய நிலையில், தனது குடும்பத்தை பாதுகாக்க தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக 41 வயதான கிரிவாக்ஸ் கூறினார்.

சமூக வலைதளங்களில் எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மோசமாக சித்தரிக்க தொடங்கியுள்ளன. எனது குடும்பதிற்கு இது தேலையில்லாதது. இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு யாரும் உட்படுத்தப்படக்கூடாது.

ஒரு வருடத்திற்கும் மேலாக, நானும் எனது குடும்பத்தினரும் அவதூறான கருத்துக்கள், பொய்கள், வதந்திகள், திருடப்பட்ட தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளோம்.

இது போதாது என்பது போல, நேற்று ஒரு புதிய நிலை எட்டப்பட்டது, தனது குடும்பத்தை மேலும் அசிங்கப்படுத்த நான் தயாராக இல்லை என பெஞ்சமின் கிரிவாக்ஸ் கூறியுள்ளார்.

பெஞ்சமினை எல்.ஆர்.இ.எம் கட்சியின் பாரிஸ் மேயர் வேட்பாளராக ஜனாதிபதி மக்ரோன் தான் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்