வெளிநாட்டுக்கு காதலியுடன் சுற்றுலா சென்ற பிரான்ஸ் நாட்டு இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஒரு பிரான்ஸ் நாட்டு இளைஞரை முன் பின் தெரியாத ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம், அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையாக காதலியுடன் அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க வந்த அந்த பிரான்ஸ் நாட்டு இளைஞர் தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை நிச்சயம் எண்ணிப்பார்த்திருக்கமாட்டார்.

Harlem என்ற இடத்திலுள்ள உணவகம் ஒன்றில் தனது காதலியுடன் சிற்றுண்டி அருந்தியபின் வெளியேவந்த அந்த 27 வயது சுற்றுலாப்பயணியை திடீரென கருப்பின இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்திலும் முகத்திலும் கீறியுள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், கழுத்து வெட்டப்பட்ட அந்த இளைஞர் இரத்த வெள்ளத்தில் மண்டியிட்டு அமர்ந்திருக்க, பதறிப்போன அவரது காதலியும் பொலிசாரும் அவருக்கு உதவ முயல்வதைக் காணமுடிகிறது.

எந்த நோக்கமும் இல்லாமல் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

இப்படி ஒரு நபர் நம் பகுதியில் நடமாடுவது அச்சத்தை ஏர்படுத்துவதாக உள்ளது. பொலிசார் அவரை விரைந்து பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கழுத்தில் வெட்டுப்பட்டதால் அபாய நிலைமையிலிருந்தாலும், அந்த இளைஞரின் உடல் நிலை சீராக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில், பொலிசார் அந்த இளைஞரை வெட்டியவரை தேடி வருகிறார்கள்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்