கொரோனா வைரஸால் பிரான்சில் முதல் உயிரிழப்பு!

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் தாக்குதலால் பிரான்சில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனா சுற்றுலாப்பயணி உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

COVID-19 எனப்படும் கொரோனா வகையை சேர்ந்த வைரஸ் தொற்று நோயால் தற்போதுவரை 1526 பேர் உயிரிழந்திருப்பதோடு, 67000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கான உயிரிழப்புகள் ஆசிய நாடுகளில் மட்டுமே நடந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 16ம் திகதியன்று ஹூபே மாகாணத்திலிருந்து பிரான்சிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 80 வயதான சீனப்பெண் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

ஜனவரி 25ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட அவருடைய நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்தது.

இந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்