1,800 மீற்றர் உயரத்திற்கு ’இறக்கை கட்டி பறந்த’ பிரான்ஸ் நாட்டவர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மனித விமானம் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், முதன்முறையாக, 1,800 மீற்றர் உயரத்திற்கு ’இறக்கை கட்டி’ பறந்து சாதனை புரிந்துள்ளார்.

ஜெட் மனிதர் என்றும் அழைக்கப்படும் Vince Reffet, நான்கு சிறு மோட்டார்கள் பொருத்தப்பட்ட கார்பன் பைபர் இறக்கைகள் உதவியுடன் 1,800 மீற்றர் உயரத்திற்கு பறந்து சாதனை புரிந்தார்.

அவரால் தனது இயந்திரத்தின் உதவியுடன் மணிக்கு 400 கிலோமீற்றர் வேகத்துக்கு பறக்க முடியும்.

துபாய் வளைகுடா பகுதியில் இந்த சாதனையை படைத்த அவர், முதல் 8 வினாடிகளில் 100 மீற்றர் உயரத்தை அடைந்தார்.

பின்னர் 12 வினாடிகளில் 200 மீற்றர், 19 வினாடிகளில் 500 மீற்றர் என, படிப்படியே 30 வினாடிகளில் 1,000 மீற்றர் உயரத்தை அடைந்தார்.

1,800 மீற்றர் உயரத்தைத் தொட்டபின், கீழிறங்கத் தொடங்கிய அவர், 1,500 மீற்றர் வரும்போது, தனது பாராசூட்டை விரித்தார்.

மொத்தம் மூன்று நிமிடங்கள் அவர் தன் இயந்திரத்தின் உதவியால் வானில் பறந்துள்ளார். அடுத்த முறை, பாராசூட் உதவி இல்லாமலே தரையிறங்க முடிவு செய்துள்ளார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்