பிரித்தானிய கடற் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமைக்காக எதிர் வரும் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளின் போது பிரெஞ்சு மீனவர்களுக்காக போராடுவேன் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பிரித்தானிய கடற்பகுதி மீன்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அதிகம் மீன் பிடிக்கும் பகுதியுமாகும் அது. எனவே பிரித்தானிய கடற்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் மீண்டும் எடுப்பது பிரித்தானியர்களின் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது.
ஆகவே, Brexit transition periodஇன் முடிவில் பிரித்தானிய கடற்பகுதியில் நுழைய பிரான்ஸ் மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், பிரான்ஸ் அதற்காக இழப்பீடு கோரும் என எச்சரித்துள்ளார் மேக்ரான்.
நான் எனது மீனவர்களுக்காக போராடுவேன் என்பதை அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ள மேக்ரான், இன்று போலவே என்றும் நமக்கு மீன் பிடி உரிமை கிடைக்கவில்லை என்றால், நாம் அதற்காக இழப்பீடு கோருவோம் என்றார்.
சூழ்நிலையைப் பார்த்தால், பிரெக்சிட்டுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளில் பிரித்தானிய கடற்பகுதியில் மீன் பிடிப்பதுதான் முக்கிய பிரச்சனையாக எழுப்பப்படும் என்று தோன்றுகிறது.