உங்கள் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்: போரிஸ் ஜான்சனுக்கு சவால் விடும் பிரான்ஸ் அமைச்சர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
339Shares

பிரித்தானியாவின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று கூறி பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கே சவால் விட்டிருக்கிறார் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர்.

பிரெக்சிட்டுக்கு பிந்தைய நிபந்தனைகள் குறித்து பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மோதிக்கொள்ள தயராகும் நிலையில், ஐரோப்பாவுக்கான பிரான்ஸ் அமைச்சரான Amelie de Montchalin, போரிஸ் ஜான்சன் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது, பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்படுவதன் தேவை இருக்கும் நிலையில், அப்படி ஒரு ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டு முடிவுக்குள் செய்யப்படவேண்டும் என அவசரப்படுத்துவதன் மூலம், தங்களை போரிஸ் ஜான்சன் பிளாக்மெயில் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார் அவர்.

வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ள Amelie, எப்படியாவது ஒரு ஒப்பந்தத்தை செய்துவிடவேண்டும் என போரிஸ் ஜான்சன் விரும்புவதால் மட்டுமே, அவர் மிரட்டலுக்கு பயந்து, நாங்கள் பிரான்ஸ் சார்பில் ஒரு மோசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால், தாங்கள் மிரட்டுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள போரிஸ் ஜான்சன், அதே நேரத்தில், 2020 இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறுவது உறுதி என்று கூறியுள்ளதோடு, எக்காரணம் கொண்டும் transition period நீட்டிக்கப்படாது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு கட்டுப்படும்

எந்த ஏற்பாடுகளையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதைவிட, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளிலிருந்து தப்பி வெளியேறுவதையே பிரித்தானியா முக்கியமானதாக கருதுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்