பல ஆண்டுகளுக்குப் பின் பிரான்சில் முதன்முறையாக முகம் காட்டிய ஆசியாபீவி: புத்தகமாக வெளியாகும் சிறை அனுபவம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மத தூஷணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானில் சிறையிலடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவப் பெண்ணான ஆசியாபீவிக்கு விடுதலைக்குப்பின் கனடா ஓராண்டு தங்க அனுமதி அளித்திருந்தது.

பெரும்பாலும் ஆசியா பீவியின் இளவயது புகைப்படம் ஒன்று மட்டுமே பத்திரிகைகளில் வெளியாகிவந்த நிலையில், தற்போது பிரான்சில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசியாபீவி முதன்முறையாக வெளியுலகுக்கு முகம் காட்டியுள்ளார்.

அவருடன், அவரது கணவர், அவரது இரண்டு மகள்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஆசியா தனது எட்டாண்டு சிறை அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிடும் நிகழ்ச்சிதான் பிரான்சில் நடைபெற்றது.

கனடாவில் பயன்படுத்தப்படும் மொழிகள் எதுவும் ஆசியாவுக்கு தெரியாது என்பதால், அவர் பிரெஞ்சு பத்திரிகையாளரான Anne-Isabelle Tollet என்பவருடன் இணைந்து Enfin Libre! (Finally Free!) என்ற பெயரில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

Michel Euler/AP

ஒரு நாள் தனது தாய்நாட்டுக்கு திரும்பவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ள அவர், என சகோதரிகள், சகோதரர், அப்பா மற்றும் எனது உறவினர்களைக் காணவேண்டும்.

என் கலாச்சாரம், எங்கள் உணவு ஆகியவற்றுக்காக மனம் ஏங்குகிறது என்கிறார்.

காலம் ஒரு நாள் நிச்சயம் மாறும், தாங்கள் குடும்பமாக பாகிஸ்தானில் மீண்டும் அனுமதிக்கப்படுவோம் என நம்புவதாக தெரிவிக்கும் ஆசியா, பிரான்ஸ் தனக்கு அடைக்கலம் தரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Thomas Samson/AFP/Getty

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்