கொரோனா வைரஸ் பரவினாலும் கை கழுவ மாட்டோம்: மூன்றில் ஒரு பங்கு பிரான்ஸ் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது, சுத்தமாக சுகாதாரமாக இருங்கள், கைகளை சோப்பு கொண்டு கழுவுங்கள் என மருத்துவர்கள் கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கம், கழிவறைக்கு போனால் கூட கை கழுவமாட்டோம் என அடம்பிடிக்கிறார்களாம் மூன்றில் ஒரு பங்கு பிரான்ஸ் நாட்டவர்கள்!

அடிப்படை சுகாதாரத்தைக் கூட கடைப்பிடிக்காத ஒரு நிலைமை பிரான்சில் நிலவுவதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

பிரான்ஸ் நாட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கழிவறைக்கு போன பின்பும், பாதிக்கு சற்று குறைவானவர்கள் சாப்பிடுவதற்கு முன்பும் கை கழுவுவதில்லை என்றும், ஐந்தில் ஒரு பங்கு மக்கள் வாரத்தில் இரு முறைதான் தங்கள் உள்ளாடைகளை மாற்றுகிறார்கள் என்றும் கூறுகிறது அந்த ஆய்வு.

ஆய்வு நிறுவனமான pollster Ifop என்ற அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையிலும், மருத்துவர்கள் அறிவுரைகள் அளித்தும், பிரெஞ்சு மக்கள் அடிப்படை சுகாதாரத்தைக் கூட கடைப்பிடிப்பதில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

அத்துடன் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கால்வாசிப்பேர் தினமும் குளிப்பதில்லையாம்.

ஆனால், இந்த விடயத்தில் ஆண்களைவிட பெண்கள் பரவாயில்லையாம். 81 சதவிகிதம் பெண்கள் தினமும் குளிக்கும் நிலையில், 71 சதவிகிதம் ஆண்கள்தான் தினமும் குளிக்கிறார்களாம்.

பிரெஞ்சு பெண்கள் சுத்தமாக இருப்பார்களா என ஒரு ஆய்வு நடத்தப்பட்டபின் ஓரளவு பெண்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறதாம்.

குளிக்கிறார்களோ இல்லையோ 80 சதவிகிதம் பெண்கள் உதட்டுச்சாயம் பூசிக்கொள்ள தவறுவதில்லையாம்.

பிரெஞ்சுப் பெண்கள் அழகைக் குறித்து நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் அதை அவர்கள் சுத்தத்துடன் தொடர்பு படுத்துவதில்லை என்றே ஒரு அமெரிக்க பத்திரிகை எழுதியிருந்ததாம்.

ஆனால் பிரான்ஸ் ஒரு நாற்றம் பிடித்த நாடு என்ற பெயரை கொண்டிருந்த நிலை இப்போது இல்லையென்றாலும், இன்னமும் செய்யவேண்டியது அதிகம் இருக்கிறது என்கிறார் பிரபல இதயநோய் மற்றும் உணவியல் நிபுணர் ஒருவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்