பாரிஸ் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..! பொதுமக்களை எச்சரித்த அதிகாரிகள்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பாரிஸில் உள்ள கரே டி லியோன் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாரிஸில் உள்ள கரே டி லியோன் ரயில் நிலையத்தில் பிற்பகல் நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில்நிலையத்தில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருவதோடு, அப்பகுதியை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கச்சேரி நடந்த இடத்திற்கு அருகே ஒரு குழுவினரால் தீ வைக்கப்பட்டதாக சமூக ஊடக கணக்குகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விடாமல் தடுக்க சிலர் முயற்சிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

காங்கோ பாடகரான ஃபாலி இப்புபா வெள்ளிக்கிழமை இரவு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அகோர்ஹோட்டல்ஸ் அரங்கில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்துள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில போராட்டக்கார்கள் தெருக்கள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் காங்கோ அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...