பிரான்சில் எகிறிய விமான டிக்கெட்டின் விலை... கொரோனா தடையால் தவித்த மக்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
790Shares

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனைத்து பயணங்களையும் தடை செய்வதாக அறிவித்த நிலையில், பிரான்ஸில் கடைசி நிமிட விமான டிக்கெட்டுகளுக்கு பயணிகள் 20,000 டொலர் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளையும் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக ஐரோப்பியாவில் இருந்து வரும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து பயணங்களுக்கும் 30 நாட்கள் தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் இருந்த அமெரிக்கர்களுக்கு இது பீதியை கிளப்பியுள்ளது.

ஏனெனில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணிக்கு இந்த தடை என்று நேற்று அவர் அறிவித்ததால், அங்கு சுற்றுலா மற்றும் உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருந்தவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்துள்ளது.

Photo: AFP

இதன் காரணமாக பிரான்சில் இருந்து புறப்படும் கடைசி நிமிட விமானங்களுக்கு அமெரிக்கர்கள் 20,000 டொலர் வரை செலுத்துவதாக இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், எனக்கும் இதன் சூழ்நிலை தெரியும், ஏனெனில் அவர்களில் நானும் ஒருவன். சரியாக பாரிஸ் உள்ளூர் நேரப்படி 2.15 மணிக்கு உறவினர் மூலம் அமெரிக்காவின் டிரம்ப், ஐரோப்பாவில் இருந்து வருபவர்களுக்கு தடை என்று அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. அதன் பின் தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்த போது அது உண்மை என்று தெளிவாக தெரிகிறது.

நான் சனிக்கிழமை NYC-க்கு திரும்ப திட்டமிட்டிருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவதால், நான் உடனடியாக ஆன்லைனில் விமானங்களை மாற்ற முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. இதனால் இது குறித்து விமான நிறுவனத்திடம் பேசலாம் என்று நினைத்தால், 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து நான் புதிய டிக்கெட் வாங்கலாம் என்று பார்த்தேன், டிக்கெட் விலை அதிமடங்காக உயர்ந்திருந்தது. அந்தளவிற்கு டிக்கெட் விலை இருந்தது.

அதன் பின் டிவியில் டிரம்ப் அமெரிக்கர்களுக்கு இந்த தடை இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் நான் இப்போது வாங்கிய டிக்கெட்ட ரத்து செய்ய போராடினேன். Delta மற்றும் Amex டிராவல் வலைத்தளங்கள் என்னை அனுமதிக்காது. இதையடுத்து நிறுவனத்திற்கு அழைத்தால் டெல்டாவிற்கு 6 மணி நேரம் காத்திருப்பு உள்ளது. அமெக்ஸில் இரண்டு மணி நேரம் இசை இசைக்கிறது, அதன் பின் துண்டிக்கப்படுகிறது.

இதனால் என்னிடம் இப்போது இரண்டு டிக்கெட்டுகள் உள்ளன. அதில் ஒன்று சனிக்கிழமைக்கும், மற்றொன்று இன்றைய நாளுக்கு, ஆன்லைனில் சனிகிழமை விமானத்தை ரத்து செய்ய முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து பாரிசின் CDG விமானநிலையத்தின் டெல்டா கவுண்டருக்கு சென்று பணத்தை திரும்ப முயன்றேன். ஆனால் அங்கு 100 பேர் எனக்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். விமானத்தில் ஏறிவிட்டேன்.

நான் ஒன்று மட்டும் இதில் தெளிவுபடுத்த விரும்புகிறேன், நான் டிக்கெட்டுகளுக்காக 20,000 டொலர் செலவிடவில்லை, CDG விமானநிலையத்தில் இருக்கும் டெல்டா டிக்கெட் முகவர் ஒருவர் என்னிடம் கூறியதாக முடித்துள்ளார்.

மேலும் பாரிசில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் John F. Kennedy சர்வதேச விமானநிலையத்திற்கு வந்திறங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்