பிரான்சில் நிலைமை மிகவும் மோசடைந்து வருகிறது! கொரோனா குறித்து எச்சரிக்கும் சுகாதார சேவை தலைவர்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸால் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சுகாதார சேவை எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை கொரோனா வைரஸ் காரணமாக 5,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கடைகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டி சுகாதார சேவையின் தலைவர் Jérôme Salomon ,பிரான்சில் கொரோனா வைரஸ் நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருகிறது, இது மிகவும் கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேற்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில், அனைவரும் வீட்டிலே இருங்கள், இது தான் மிகவும் நல்லது. தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த நாடு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...