ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாடு தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

எதிர்வரும் சில மணிநேரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக திங்கள்கிழமை முதல் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் எல்லைகளில் எல்லைக் கட்டுப்பாடுகளை தற்காலிகமாக அறிமுகப்படுத்த ஜேர்மனி முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோனும் ஜேர்மனியின் மெர்க்கலும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுத்த ஒருதலைப்பட்ச எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மக்ரோன் கண்டித்தார்.

எல்லைகளை மூடுவது ‘சிறந்த வழி அல்ல’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் குழு கூறியது.

எந்தவொரு எல்லை நடவடிக்கைகளும் உணவு அல்லது மருத்துவப் பொருட்களுக்கு இடையூறு விளைவிப்பதன் மூலம் நெருக்கடி மோசமாகும், இதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்