நாளை முதல் எல்லைகள் அனைத்தும் மூடப்படும்: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாளை முதல் ஷெங்கன் பிரதேச எல்லைகள் மூடப்படும்என பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில், தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஷெங்கன் எல்லைகள் நாளை மதியம் முதல் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் உணவுக்காக கடைகளுக்கு செல்லாமலோ அல்லது ஒரு மருந்தகத்திற்குச் செல்லாமலோ, முற்றிலும் அத்தியாவசிய வேலைக்குச் செல்லாமலோ அல்லது தனியாக உடற்பயிற்சி செய்யாமலோ மக்கள் வீட்டில் தங்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.

வைரஸுடன் பிரான்ஸ் 'போரில்' இருப்பதாக கூறிய மக்ரோன், மார்ச் 22 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்று உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

காவல்துறையும் இராணுவமும் புதிய கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தும், அதனை மீறுபவர்களுக்கு இதுவரை குறிப்பிடப்படாத தண்டனைகள் வழங்கப்படும்.

ஆபத்தான வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஹோட்டல்களும் பிற தனியார் வணிகங்களும் அரசால் கோரப்படும்.

பிற ஐரோப்பிய நாடுகளுடனான எல்லைகளும் மூடப்படும். இருப்பினும் பிரெஞ்சு நாட்டவர்கள் 'வீடு திரும்ப' அனுமதிக்கப்படுவார்கள்.இந்த நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்குத் தொடங்கி, 'குறைந்தது இரண்டு வாரங்களுக்கு' தொடரும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்