மொத்தமாக முடக்கப்பட்ட பிரான்ஸ்: வாடகை, மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் ரத்து!

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகளையும் புதிய கோரிக்கைகளையும் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு பிரான்ஸ் முற்றாக முடங்குவதாக அறிவித்துள்ள மேக்ரான்,

போதிய காரணங்கள் இன்றி தனியாகவோ, குடும்பமாகவே வெளியில் செல்லவேண்டாம் எனவும், கொரோனா வைரசுக்கு எதிராக நாம் அனைவரும் பொறுப்புடையவர்களாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் இடங்கள் மாத்திரம் இன்று நண்பகலுக்கு பின்னர் திறந்திருக்கும்.

ஆவணங்கள் இன்றி வெளியில் செல்வோருக்கும், போதிய காரணங்கள் இன்றி பயணிப்போருக்கும், அல்லது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கூட்டமாக செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 135 யூரோ அளவுக்கு அபராதமாக விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. பாரிஸ் உட்பட அனைத்து நகரங்களிலும் சோதனை மேற்கொள்ள காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வாடகை, மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்ப படிவம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறித்த படிவத்தை நிரப்பிவிட்டு கையில் எடுத்துச் செல்லவேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்தில் உள்ளவற்றை நிரப்பிவிட்டு அதற்குரிய அத்தாட்சி ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரன்ஸ் மொத்தமும் முடக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 6,633 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்