கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் இவர்களுக்கு மட்டும் லாபம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்சின் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் நல்ல வருவாய் கிடைத்துவருகிறது. அது Marseilleஇல் சோப்பு தயாரிக்கும் ஒரு நிறுவனம்.

உள்ளூரிலேயே கிடைக்கும் ஒலிவ எண்ணெய், மத்தியதரைக்கடல் தண்ணீர், கடல் தாவரங்களிலிருந்து கிடைக்கும் சோடா ஆகியவற்றைப் பயன்படுத்தி 600 ஆண்டுகளாக இந்த நிறுவனம் சோப்பு தயாரித்து வருகிறது.

அதாவது, தனது தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறையாக இந்த சோப்பு தயாரித்தல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார் Serge Bruna என்பவர். இன்னும் அவரது தாத்தா தொடங்கிய அதே கடையில் சோப்பு வியாபாரம் செய்துவருகிறார் Serge Bruna.

கொரோனா அச்சத்தால் விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில், மாஸ்கும், கையுறையும் அணிந்து வியாபாரம் செய்கிறார் அவர்.

மற்ற இடங்களிலிருக்கும் எங்கள் கடைகளுக்கு சில சுற்றுலாப்பயணிகள்தான் வருவார்கள், அதுவும் எப்போதும் இல்லை என்று கூறும் Serge Bruna, அதே நேரத்தில் Marseillesஇல் வாழ்பவர்கள் அடிக்கடி இங்கு வருவார்கள், சொல்லப்போனால் மொத்தமாக சோப்புகளை வாங்கிச் செல்வதும் உண்டு என்கிறார்.

முன்பை விட இப்போது சோப்பு தயாரிப்பது அதிக முக்கியமாகிவிட்டதா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், Marseille சோப்புகளை பயன்படுத்தும் பழக்கத்தை விட்டிருந்தவர்கள் கூட, திடீரென மீண்டும் அதன் அருமையை உணர்ந்ததுபோல் தோன்றுகிறது என்கிறார் Serge Bruna.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...