ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக உயரிய அதிகாரிக்கு கொரோனா!

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் (69), தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது வீட்டில் இருந்து பேசிய பிரெஞ்சு அரசியல்வாதியான மைக்கேல் பார்னியர், 'நன்றாகவும் நல்ல மனநிலையுடன்' இருப்பதாகவும் தனது ஊழியர்களுடன் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியதோடு, நெருக்கடியை எதிர்த்துப் போராடும் சுகாதார ஊழியர்களைப் பாராட்டியும் பேசியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...