பிரான்சில் பரவும் கொரோனாவை தடுக்க உதவிக்கரம் நீட்டும் மதுபான தயாரிப்பு நிறுவனம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் பிரபல மதுபானம் தயாரிக்கும் நிறுவனமான Pernod-Ricard நிறுவனம், 70,000 லிற்றர் ஆல்கஹாலை கைகளுக்கான கிருமிநாசினி (hand sanitiser) தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு வழங்க முன்வந்துள்ளது.

நாட்டில், கைகளுக்கான கிருமிநாசினி பற்றாக்குறை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஆரோக்கியம் தொடர்பான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான Laboratoire Cooper நிறுவனத்திற்கு இந்த ஆல்கஹால் வழங்கப்பட உள்ளது.

இதன் பலனாக 1.8 மில்லியன் 50 ml போத்தல்கள் கைகளுக்கான கிருமிநாசினி தயாரிக்கமுடியும்.

அதேபோல், பிரான்சில் ஆடம்பரப்பொருட்கள் மற்றும் அழகுப்பொருட்கள் தயாரிக்கும் LVMH என்ற நிறுவனம், தானும் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் கைகொடுக்க முன்வந்துள்ளது.

பிரான்சில் கைகளுக்கான கிருமிநாசினி பற்றாக்குறை நிலவும் நிலையில், LVMH நிறுவனத்தின் அழகுப்பொருட்கள் தயாரிக்கும் பிரிவு, பெருமளவில் கைகளுக்கான கிருமிநாசினி தயாரித்து இலவசமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்