வைரஸ் கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 130,000 பிரான்ஸ் நாட்டு குடிமக்கள்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் காரணமாக உலகநாடுகள் விதித்திருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளால் 130,000 பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள, தங்கள் நாட்டை சேர்ந்த 130,000 பேரை திருப்பி அனுப்புவதற்கு பிரான்ஸ் முயற்சித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு ட்ரையன் தெரிவித்துள்ளார்.

அடிப்படைக் கொள்கை என்னவென்றால், 130,000 பேரை நாங்கள் மீண்டும் தேசிய எல்லைக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

அதுவரை அவர்களை அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணசீட்டுகளுக்கு பணம் செலுத்துவது அவர்களுடையது எனத்தெரிவித்துள்ளார்.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான பிரான்ஸ் வெளிநாட்டவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு லு ட்ரையன் வலியுறுத்தியதுடன், தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் போதுமான அளவு பின்பற்றப்படாவிட்டால், மக்களின் நகர்வுகளை கட்டுப்படுத்த பிரான்சில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில் துனிசியாவிற்கான பிரான்ஸ் தூதர் ஆலிவர் போய்ரே டி ஆர்வோர், வெள்ளிக்கிழமை மாலைக்குள் துனிசியாவை விட்டு வெளியேறுமாறு அனைத்து பிரெஞ்சு நாட்டினரையும் வலியுறுத்தியுள்ளார்.

துனிசியாவிலிருந்து பிரான்சிற்கு இனி விமானங்கள் எதுவும் இருக்காது. கடைசி விமானங்கள் துனிஸ் மற்றும் டிஜெர்பாவிலிருந்து புறப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...