அலட்சியமாக இருக்கும் பிரான்ஸ் மக்கள்: தெருவில் நடந்தாலே கைது செய்ய தயாராகும் பொலிஸ்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களில் பலரும் அவற்றை மீறி வருவதால் பிரான்ஸ் பொலிஸார் கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸானது நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், முன்னோடியில்லாத வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

மருத்துவரிடம் செல்வது, நாயுடன் நடப்பது, அல்லது தனியாக ஓடச் செல்வது போன்ற அத்தியாவசிய உல்லாசப் பயணங்களைத் தவிர, எந்தவொரு கூட்டங்களிலும் பிரான்ஸ் மக்கள் இடம்பெற கூடாது என கூறியிருந்தார்.

ஆனால் பொதுமக்களில் பலரும் ஜனாபதியின் உத்தரவை புறக்கணித்துவிட்டு நேற்று தெருக்களில் அனாவசியமாக சுற்றி திரிந்தனர்.

இதனால் கடுமையாக நடந்துகொண்ட பொலிஸார், 4000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அரை மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அபராதம் விதித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று பொலிஸாரின் பேச்சுக்கு செவிமடுக்காமல் சுற்றித்திரிந்த, 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

முட்டாள்தனமாக பிரான்ஸ் மக்களில் சிலர் விதிகளை மீறி நடந்துகொண்டதால், கட்டுப்பாடுகள் இன்னும் 14 நாட்கள் நீடிக்கப்படலாம் என உள்துறை மந்திரி கூறியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்