பிரித்தானியா கொரோனாவுக்கெதிராக போராடும் நேரத்தில் கடுப்பேற்றிய பிரான்ஸ்: மாஸ்க் ட்ரக்கை தடுத்த பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானிய மருத்துவர்கள் கொரோனாவுக்கெதிராக போராடி வரும் நிலையில், அவர்களுக்காக கொண்டு செல்லப்படும் மாஸ்க் அடங்கிய ட்ரக்கை தடுத்து நிறுத்தி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது பிரான்ஸ்.

பிரித்தானியாவுக்கு அனுப்புவதற்காக 130,000 மாஸ்குகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லொறிகள் ஆங்கிலக் கால்வாயை நோக்கி வந்துள்ளன.

அவற்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பிரான்ஸ் அதிகாரிகள், அவற்றில் இருப்பது மாஸ்க் என்பது தெரியவந்ததும் லொறிகளை கைப்பற்றினர்.

ஏற்கனவே மாஸ்குகள் அனைத்து அரசுடைமை என பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அவை பிரான்ஸ் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Credit: Doug Seeburg - The Sun

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவாக, உடனடியாக உயர் மட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

அதன் பின்னரே அந்த மாஸ்குகள் பிரித்தானியாவுக்கு கொண்டுசெல்லப்பட அனுமதிக்கப்பட்டன.

ஒரு நாளைக்கு முன்புதான் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள் அடங்கிய ஆயிரக்கணக்கான போத்தல்களுடன் பிரித்தானியா நோக்கி புறப்பட்ட மற்றொரு லொறியை பிரான்ஸ் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Credit: London News Pictures

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்