கொரோனா நெருக்கடியை கையாண்ட விதம்... பிரான்ஸ் மக்களின் மனதை வென்ற ஜனாதிபதி மேக்ரான்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், கொரோனா வைரஸை கையாண்ட விதம் காரணமாக அவரின் மதிப்பு மக்களிடம் உயர்ந்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், தேவையில்லாத பயணங்களை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் 12,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில், ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த கருத்துகணிப்பின் படி, கொரோனா வைரஸ் நெருக்கடியை அவர் கையாண்ட விதம் மக்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும், இதுவே அவருக்கு அதிக வாக்குகள் பெறுவதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

எல்.சி.ஐ தொலைக்காட்சிக்கான ஹாரிஸ் இன்டராக்டிவ் கருத்துக் கணிப்பின்படி, முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 13 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதோடு பிரான்சில் இருக்கும் 51 சதவீதம் மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்த வார துவக்கத்தில் கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக மேக்ரான் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். இந்த தொலைக்காட்சி உரையை சுமார் 35 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இது பிரான்சின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்.

பிரபலமற்ற வணிக சார்பு சீர்திருத்தங்களால் தூண்டப்பட்ட மஞ்சள் ஆடை கிளர்ச்சியின் மத்தியில், 2018-ன் டிசம்பரில் மேக்ரானின் புகழ் 31 சதவீதமாக குறைந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் அது 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

இப்படி ஆளும் கட்சிக்கி இரண்டு ஆண்டுகளில் அதன் மதிப்பு உயர்வது முதல் முறை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...