ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் விடுவிப்பு

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

ஈரானிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ரோலண்ட் மார்ச்சல் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் 2019 முதல் ஈரானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளரும் , கல்வியாளருமான ரோலண்ட் மார்ச்சலை ஈரானிய அதிகாரிகள் விடுவித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதியில் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரோலண்ட் சனிக்கிழமை மதியம் பிரான்சிற்கு வரவுள்ளார் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இன்னும் சிறையில் உள்ள மற்றொரு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குடிமக்களும், மார்ச்சல் உடன் பணிபுரியுபவருமான ஃபரிபா அடெல்காவையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

மார்ச்சல் "தேசிய பாதுகாப்புக்கு எதிரான கூட்டு" என்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அடெல்கா உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதாக இருவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்