மருத்துவமனைகள் முற்றாக முடங்கும் அபாயம்: ஜேர்மனியை நாடும் பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளால் அங்குள்ள மருத்துவமனைகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஜேர்மனியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

ஜேர்மானிய மாநிலமான Baden-Wuerttemberg உள்ள சில மருத்துவமனைகள் அண்டை பிராந்தியமான Alsace பகுதியைச் சேர்ந்த தீவிரமான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளன.

தென்மேற்கு ஜேர்மன் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு போதனா மருத்துவமனைகள் மற்றும் ஒரு இராணுவ மருத்துவமனை உள்ளிட்டவைகள் தீவிர சிகிச்சை தேவைப்படும் 10 பிரெஞ்சு நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மட்டுமின்றி மேலதிக நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யவும் குறித்த ஜேர்மன் மாநிலம் முனைப்பு காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு பிரெஞ்சு நகரங்களான Mulhouse மற்றும் Colmar-ல் உள்ள மருத்துவர்கள் சுகாதார அமைப்பு முற்றிலும் ஸ்தபிக்கும் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், கொரோனாவால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 20% அதிகரித்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கம் அதன் 67 மில்லியன் மக்களை தீவிர கண்காணிப்பில் முடக்கியுள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு கட்டுப்படாத குடிமக்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் 135 யூரோ வரை அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்