கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் வெளியே திரியும் பிரெஞ்சு மக்கள்: வுஹான் மருத்துவர் கடும் கண்டனம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகமே கொரோனாவைக் குறித்து பதறிப் போய்க் கிடக்கிறது. இந்நிலையில், ஜேர்மானிய இளைஞர்கள் கொரோனா பார்ட்டிகள் கொண்டாடுகிறார்கள், வயதானவர்களைப் பார்த்தால் வேண்டுமென்றே அவர்கள் முகத்துக்கு நேராக இருமுகிறார்கள்.

ஸ்பெயினில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், ஒருவர் வேண்டுமென்றே தன் ஆட்டை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

பிரான்சிலிருந்து ப்ளோரிடா வரை, கடலில் சாகஸம் செய்வோர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்து கடற்கரைகளில் கூடுகிறார்கள். சில இடங்களில் கேள்வி கேட்கும் அதிகாரிகளையே மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன.

சிலர், விதிகளை மீறுவதால் தங்களை ஹீரோக்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள் என்கிறார் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Christophe Castaner. ஆனால், அவர்களை அறிவில்லாதவர்கள், உங்களுக்கே நீங்கள் அச்சுறுத்தல் என்கிறேன் நான் என்கிறார் அவர்.

medicalxpress

அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலொழிய வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் மக்கள் இணங்க மறுத்து வருவதையடுத்து, தங்கள் விடுமுறை இல்லங்களிலிருந்து பயணித்து கொரோனாவை கடற்கரைகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு பரப்புவதை தடுப்பதற்காக, பிரான்ஸ், வெள்ளியன்று பாதுகாப்புப் படையினரை ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், பாரீஸில் Seine நதியை ஒட்டிய பிரபல நடைபாதை மூடப்பட்டு, Nice பகுதியில் இரவு நேரங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ள மேயரான Christian Estrosiக்கே கொரோனா தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பிரான்சை பிறப்பிடமாகக் கொண்டவரும், வுஹான் சர்வதேச மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரியுமான Dr. Philippe Klein, உலகின் மற்ற பகுதிகளிலுள்ள மக்கள் விதிகளை மீறி வருவது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவில் பல்லாயிரக்கணக்கானோர் விதிகளுக்கு அடங்கி வீடுகளுக்குள் அடங்கியதைத் தொடர்ந்து, சில நாட்களாக அங்கு புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றவில்லை.

ஆகவே சீனாவை முன்னுதாரணமாகக் கொண்டு, எங்களைப்போலவே நீங்களும் விதிகளை மதித்து நடக்கவேண்டும் என பிரான்ஸ் நாட்டவர்களாகிய உங்களை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...