இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது... பிரான்சில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பரவி வரும் கொரோனாவை எதிர்கொள்வதற்காக இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் பிரான்ஸ் பிரதமர்.

நேற்றிரவு தொலைக்காட்சி மூலமாக மக்களுடன் உரையாற்றிய பிரான்ஸ் பிரதமர் Edouard Philippe, பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

பிள்ளைகளுடன் வெளியே செல்வதற்கான நேரம் ஒரு மணி நேரம் மட்டுமே என்றும், அதுவும் வீடு இருக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே செல்லவேண்டும் என்றும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செல்லவேண்டும் என்றும், மற்றவர்களுடன் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாராவது வெளியே செல்லவேண்டுமானால், அவர்கள் அதற்காக ஒரு படிவத்தை நிரப்பவேண்டும்.

ஒவ்வொரு முறை ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், ஒவ்வொருவரும் தனித்தனியே நிரப்பப்பட்ட இந்த படிவத்தை தங்களுடன் கொண்டுசெல்லவேண்டும்.

அத்துடன், தொழில் ரீதியாக வெளியே செல்வதற்கு தனியாக ஒரு படிவம் உள்ளது. ஒருவர் தனது குழந்தைகளுடன் வெளியே சென்றால், அந்த படிவத்தில் குழந்தைகள் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்.

முன்போல் இல்லாமல், தற்போது என்ன நேரத்திற்கு வெளியே செல்கிறீர்கள் என்பதும் அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.

ஒரு பகுதிக்கான உணவுப்பொருட்களை வழங்குவதற்கானவையாக இருக்கும் சந்தைகள் தவிர்த்து, மற்ற சந்தைகள் மூடப்படும்.

மருத்துவ காரணங்களுக்காக பயணிப்போர், அதற்கான முறைப்படியான அனுமதியை மருத்துவரிடமிருந்து பெற்றிருக்கவேண்டும். மருந்தகம் செல்வதும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்வதன் கீழ் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது. இந்த மாற்றங்கள் மார்ச் 24இலிருந்து அமுலுக்கு வருகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...