கொரோனாவால் முடக்கப்பட்ட இந்தியா... ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி: பீதியில் உறைந்த தமிழக மக்கள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டவரான தம்பதியினர் ஆட்டொவில் வலம் வந்ததால் அப்பகுதி மக்கள் கொரோனா அச்சம் காரணமாக பீதியில் உறைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டாம் ஓட்டன்சத்திரம் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலை அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோ என்ஜின் பழுது ஏற்பட்டு நின்றது.

ஆட்டோவில் வெளிநாட்டினர் இருவர் இருந்ததைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், கொரோனா தொற்று நோய் பரவும் அச்சத்தில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொடைக்கானல் வந்து, அங்கே ஆட்டோ ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கிக் கொண்டு சென்னை சென்றது தெரியவந்தது.

அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்தபோது வர முடியாது என்றும், தாங்கள் ஏற்கனவே 6 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்பின், வேறு ஒரு ஆட்டோவை வரவழைத்து வெளிநாட்டினரின் ஆட்டோவை கட்டி இழுத்துக்கொண்டு வேடசந்தூர் வழியாக செல்லும்படி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அவர்களுக்கு முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யாமல் அனுப்பிவைத்துவிட்டதாக, மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...