பிரான்சில் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் இணைந்துகொள்ளும் கண் கண்ணாடி நிபுணர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கண் பரிசோதனை செய்து கண்ணாடிகளை உருவாக்கும் பணியாளர்களும் கொரோனா போராட்டத்தில் தங்கள் பங்கை ஆற்ற முன்வந்துள்ளனர்.

மருத்துவ பணியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு கண் கண்ணாடிகளில் பிரச்சினை ஏற்படும்பொது அவற்றை சரி செய்ய கண் கண்ணாடிகளை உருவாக்கும் பணியாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்களாகவே முன்வந்து வாரத்திற்கு ஒருமுறை தங்கள் அலுவலகங்களை திறக்கவும் அவர்கள் முன்வந்துள்ளனர்.

மருத்துவ பணியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்றாலும், கண்ணாடி உடைந்து போதல் அல்லது பெரிய பழுது ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் நிலையில், மற்றவர்களும் கண் கண்ணாடிகளை உருவாக்கும் பணியாளர்களை நாடலாம். ஆனால், அவர்கள் முன்கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும்.

குளிர் கண்ணாடிகளில் ஏற்படும் பழுதை நீக்குதல் அவசர காலப் பணியாக கருதப்படாது, குளிர் கண்ணாடிகள் இந்த காலகட்டத்தில் விற்கவும் படாது.

இதற்கிடையில், கண் கண்ணாடிகளை உருவாக்கும் பணியாளர்கள் தங்களுக்கு மாஸ்குகள் மற்றும் கையுறைகள் வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், எந்த துறைகள் அத்தியாவசியத் துறைகள் என கருதப்படுகின்றனவோ, அவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்