பிரான்சில் அதிவேக ரயிலில் கொண்டு செல்லப்படும் கொரோனா நோயாளிகள்! வெளியான வீடியோ காட்சி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக இரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி போன்ற நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும் உள்ளது.

பிரான்சில் தற்போது வரை மட்டும் 25,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,331 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பிரான்ஸ் அரசு மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமாளிப்பதற்கு சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் Alsace பிராந்தியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சமாளிப்பது சிரமமாக இருப்பதால், அங்கிருக்கும் நோயாளிகள் மற்ற பகுதிகளுக்கு(மருத்துவ திறன் வசதி கொண்ட),கொண்டு செல்லப்படவுள்ளனர். இதனால் நோயாளிகள் இரயிலில் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு மாற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...