என் கணவர் அவரது காதலியை சந்திக்க போய்விடுவாரா?: கொரோனாவால் பிரெஞ்சு பொலிசார் சந்திக்கும் வெறுப்பூட்டும் கேள்விகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனா பரவக்கூடாது என்பதற்காக நான் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறேன், ஆனால், அதைப் பயன்படுத்தி என் கணவர் அவரது காதலியை சந்திக்கப்போய்விட வாய்ப்பிருக்கிறதா?

இது பொலிசாரின் அவசர சேவை மையத்தை அழைத்த ஒரு பெண்ணின் கேள்வி! மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல், பிரான்சில் மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்.

அப்படி அடைந்து கிடப்போர், பொலிசாரின் அவசர சேவை மையத்தை தொடர்புகொண்டு தங்கள் சந்தேகங்களை குறித்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், பொலிசாருக்கு வரும் கேள்விகள் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கின்றனவாம்!

ஒரு பெண், இந்த கொரோனாவைக் காரணம் காட்டி தன் கணவர் அவரது காதலி வீட்டில் போய் வார இறுதியில் தங்கிவிட வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது விவாகரத்துக்குப் பின் எனக்கு இன்னொரு காதலர் கிடைத்திருக்கிறார். ஆனால், அவர் 25 கிலோமீற்றர்களுக்கு அப்பால் வசிக்கிறார். எப்படி நாங்கள் சந்திப்பது என்று கேட்டுள்ளார் மற்றொரு பெண்.

இன்று காலை என்னுடைய நாயை வாக்கிங் அழைத்துச் சென்றேன், இன்று மாலையும் நான் அதை செய்ய அனுமதியுண்டா என்கிறார் ஒருவர்.

என் பக்கத்து வீட்டுக்காரர் நிறைய பேருடன் பேசிக்கொண்டேயிருக்கிறார், அவர் வீட்டில் அடைந்து கிடப்பதேயில்லை என்று புகார் தெரிவித்துள்ளார் இன்னொருவர்.

யாரோ முன் பின் தெரியாத ஒருவர் என் குதிரையைத் தொட்டுவிட்டார், அதனால் அதற்கு கொரோனா வந்துவிடுமா என்பது மற்றொருவரின் கவலை.

பிரான்சில் மக்கள் வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இப்படி வெறுப்பூட்டும் கேள்விகளை தினமும் எதிர்கொள்ளவேண்டி வந்தாலும், குடும்பச் சண்டைகள் மற்றும் அயலகத்தாருடனான பிரச்சினைகள் இந்த காலகட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்