பிரான்சில் 4 மில்லியன் ஊழியர்கள் சம்பளம் பெறுவார்கள்.! தொழிலாளர் அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

கொரோனா காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பகுதி வேலையின்மை திட்டத்தின் ஆதரவில் இப்போது 4 மில்லியன் பிரெஞ்சு ஊழியர்கள் உள்ளனர் என்று பிரான்சின் தொழிலாளர் அமைச்சர் முரியல் பெனிகாட் தெரிவித்தார்.

பிரான்சில் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 4,032 ஆக உயர்ந்துள்ள நிலையில் தற்போது வரை 56,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 15ம் திகதி நாடு முழுவதும் முடக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் அரசாங்கத்தின் பகுதி வேலையின்மை திட்டத்தின் ஆதரவில் இப்போது 4 மில்லியன் பிரெஞ்சு ஊழியர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது என்று பிரான்சின் தொழிலாளர் அமைச்சர் முரியல் பெனிகாட் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்க அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்கும் போது நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டைக் குறைக்கலாம்.

குறைந்தபட்ச ஊதியத்தில் அல்லது பகுதிநேர வேலையில் உள்ள ஊழியர்கள் தங்கள் வழக்கமான சம்பளத்தில் 100% பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார். மற்ற ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 84% பெறுவார்கள், பெனிகாட் மேலும் கூறினார்.

பகுதி வேலையின்மை திட்டம், நெருக்கடிக்குப் பின்னர் நாட்டை விரைவாக மீட்க உதவும், இது முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைப் பேணுகிறது என்று பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் விளக்கினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்