பிரான்ஸ் தலைநகரில் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் புதிய தடை!

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெளிப்புற உடற்பயிற்சிக்கு பகல்நேர தடை(Daytime Ban On Outdoor Exercise) விதிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் பாரிஸில் வெளியில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் மக்கள் காலை 10 மணிக்கு முன் அல்லது இரவு 7 மணிக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவும் அபாயங்களைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ மற்றும் பாரிஸ் காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளன.

ஏப்ரல் 8, 2020 முதல், பாரிஸ் பிரதேசம் முழுவதும் தனிப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகளுக்கான பயணங்கள் இனி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அங்கீகரிக்கப்படாது.

ஆகவே, இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை, தெருக்களில் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும்போது அவை அங்கீகரிக்கப்படுகின்றன என பாரிஸ் மேயர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் 98,984 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, 8,911 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்