உலகில் அதிக பலிகளை கொண்ட நாடாக பிரான்ஸ்! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்? வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் சில கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் இந்த வைரஸின் தீவிரத்தை தெரியாமல், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

anews

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1417-ஆக உள்ளது, இதன் மூலம் உலகில் 24 மணி நேரத்தில் அதிக உயிரிழப்பை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-யும் தாண்டி 10,328 ஆக உள்ளது.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பொது சுகாதார அதிகாரசபையின் தலைவர் ஜெரோம் சாலமன் கூறுகையில், இதில் இறந்தவர்களில் மருத்துவனைகளில் மட்டும் இதுநாள் வரை 7,091 பேர் எனவும் மற்றவர்கள் நர்சிங் ஹோம்களில் இறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய புள்ளி விவரங்கள் மூலம் இறந்தவர்களின் சதவீதம் 16-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் திங்கட் கிழமை 10 சதவிதமும், ஞாயிற்றுக் கிழமிஅ 7 சதவீதமுமாக இருந்தது. இதன் மூலம் கொரோனாவால் 10,000-க்கும் மேற்பட்ட உயிர்களை கொடுத்த நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்