பிரான்சில் நுழையும் புதிய நபர்களுக்கு கடுமையான விதிமுறைகள்! வெளியான முழு விபரம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இனி புதிதாக நுழைபவர்களுக்கு சர்வதேச பயண சான்றிதழ் மூலம் அந்நாடு விதிகளை கடுமையாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பல, தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. ஆனால் பிரான்ஸ் அப்படி தன்னுடைய எல்லையை மூடவில்லை.

இந்நிலையில் தற்போது கடந்த 6-ஆம், திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராக இருந்தாலும், அனுமதி படிவம் தேவை என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

பிரான்சிற்குள் பயணிக்க விரும்புவர்கள் ஏற்கனவே வந்திருந்தால், அவர்கள் அதன் திகதி மற்றும் நேரம் கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நுழைய முடியும்.

இது international travel certificate (சர்வதேச பயண சான்றிதழ்) என்று கூறப்படுகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், யார் எல்லாம் நாட்டின் உள்ளே அனுமதிக்கபடுகிறார்கள் என்பதற்கான கடுமையான வரையறைகள் இதில் வகுக்கப்பட்டுள்ளது.

அதில் இருக்கும் முக்கிய குறிப்புகள்

  • பிரான்சில் தங்களது முதன்மை குடியிருப்பு உள்ளவர்கள்.
  • மூன்றாம் நாட்டு நாட்டினருக்கு விசா அல்லது இங்கு இருப்பதற்கான வீட்டின் அடையாள அட்டையை வழங்க வேண்டும். இது ஐரோப்பிய ஒன்றிய மக்கள் மற்றும் பிரித்தானிய மக்களுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
  • வேறொரு ஐரோப்பிய நாட்டில் நிரந்தர வீடுகளை கொண்டவர்கள், வீடு திரும்புவதற்காக பிரான்ஸ் வழியாக பயணம் செய்கிறார்கள்.
  • கொரோனா வைரஸ் தொடர்பான பராமரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள்.
  • லாரி டிரைவர்கள் மற்றும் விமானம் அல்லது சரக்கு குழுக்கள்.
  • எல்லை தாண்டிய தொழிலாளர்கள். (உதாரணமாக நீங்கள் பிரான்சில் வசிக்கிறீர்கள், ஆனால் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்தால் நீங்கள் முன்னும், பின்னுமாக பயணிக்க முடியும்)
  • பிரான்ஸ் குடிமக்களும் அவர்களது குழந்தைகளும் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் வெளிநாட்டவர்கள் சில தேவையான சூழ்நிலை என்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் அல்லது பிரித்தானிய மக்கள் தங்களின் இரண்டாவது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும், பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும், கடுமையாக தடைசெய்யப்பட்ட சேவைகள் இருந்தபோதிலும், பிரான்சிற்கான விமானங்கள், ரயில்கள் மற்றும் படகுகள் இன்னும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்