பிரான்சில் முதியோர் காப்பகங்களை பலிவாங்கும் கொரோனா வைரஸ்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் முதியோர் காப்பகங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக தற்போது உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை சுகாதார மையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்களில் ஏற்படும் கொரோனா இறப்புகளை மொத்த பட்டியலில் சேர்க்காமல் விட்டதாக தகவல் வெளியான நிலையில்,

சமீப நாட்களில் அந்த எண்ணிக்கையும் மொத்த பட்டியலில் சேர்க்கப்பட்டு நாள்தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில் மொத்தமுள்ள 10,328 கொரோனா இறப்புகளில் 3,237 இறப்புகள் முதியோர் காப்பகங்களில் பாதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது 31 விழுக்காடு என பதிவாகியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,091 என கூறப்படுகிறது.

இதனிடையே, நான்கு வார காலம் பிரான்ஸ் மொத்தம் முடக்கப்பட்டிருந்தும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை என பொது சுகாதார நிர்வாகத்தின் தலைவர் ஜெரோம் சாலமன் கவலை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 8 நாட்களாக கட்டுக்குள் இருப்பது நம்பிக்கை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 29,871 பேரில் 40 சதவீதம் பேர்கள், அதாவது 12,074 பேர் பாரிஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்