தொண்டைக்குள் கத்தி சொருகுவது போல... பிரான்சின் முதல் கொரோனா நோயாளியின் நடுங்க வைக்கும் அனுபவம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சின் முதல் கொரோனா நோயாளியான 43 வயது நபர் தமது அனுபவத்தை முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரான்சில் முதலாவதாக கொரோனா பாதிப்புக்கு இலக்கானவராக அடையாளம் காணப்பட்டவர், பொபினியில் வசிக்கும் 43 வயதுடைய Amirouche Hammar என்பவராவார்.

இவரையே மருத்துவர் ஈவ் கோஹன், ஐரோப்பியாவின் முதல் கொரோனா நோயாளி என அடையாளப்படுத்தியிருந்தார்.

இவரது மனைவி மூலமே இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அமிரூஸ் தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடியில், சீன ஜப்பானிய உணவு வகைள் விற்கும் பிரிவிலும் இவரது மனைவி வேலை செய்துள்ளார். அங்கு பல வெளிநாட்வர்கள் வந்து சென்றுள்ளனர்.

முதலில் இவரது மனைவிக்குக் கடுமையான காய்ச்சலும் இருமலும் சில நாட்கள் இருந்துள்ளன. பின்னர் தானகவே மாறியுள்ளது. அதன் பிறகே இவர் நோய்வாய்ப்பட்டுள்ளார்.

முதலில் நிமோனியா காய்ச்சல் என கருதியதாகவும், ஆனால் தொண்டைக்குள் கத்தி சொருகுவது போலான தாங்க முடியாத வலியுடன், கடுமையான காய்ச்சலும் விடாது வாட்டியதாக அமிரூஸ் தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் கடந்த நிலையில் தொண்டை வலியும் காய்ச்சலும் அதிகமாகவே, மருத்துவமனையை நாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாகவே பரிசோதித்து விட்டு, சுவாசப்பையில் தொற்று ஏற்பட்டதாகக் கூறி, அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆக்சிஜன் மூலம் சுவாசிக்க வைக்கப்பட்டேன் என்கிறார் அமிரூஸ்.

குணமாகிச் சில நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சையளித்த மருத்துவர் ஈவ் கோஹன் தொலைபெசியில் தொடர்பு கொண்டபோதே, கொரோனா வந்து குணமடைந்தது தமக்கு தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது எனக்குப் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது. உடனடியாக என்போல் காய்ச்சலினாலும் தொண்டை வலியாலும் அவதிப்பட்ட எனது இரண்டு பிள்ளைகளையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தேன் என்றார்.

அவர்கள் இப்பொழுது நலமுடன் உள்ளார்கள். இருப்பினும் ஆரம்பத்திலேயே எனக்குக் கொரோனா வந்திருந்தும், நான் நீரிழிவு நோயாளியாக இருந்தும், என்னை மருத்துவர்கள் காப்பாற்றியது எனது அதிர்ஷ்டமே என அமிருஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்