மே 11 முதல் பிரித்தானியர்கள் பிரான்ஸ் வர அனுமதி... சலுகையும் உண்டு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மே மாதம் 11ஆம் திகதியிலிருந்து பிரித்தானியர்கள் பிரான்சுக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

மேலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் பிரான்சுக்குள் நுழைந்ததும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

பிரான்ஸ் அரசு, பிரித்தானியா மற்றும் Schengen மண்டலத்திலுள்ள நாட்டு குடிமக்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக விதித்துள்ள 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

பிரான்ஸ், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பின்பற்றி, மார்ச் மாதத்தின் மையப்பகுதியில் எல்லைகள் மூடப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரான்ஸ் அரசு, நாட்டின் சுகாதார அவசர நிலை ஜூலை மாதம் 24ஆம் திகதி வரை தொடரும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்