உலகில் எவரும் சந்தித்திராத இழப்பு: கொரோனாவால் பிரான்ஸ் கோடீஸ்வரர் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

கொரோனா காலகட்டத்தில் உலகில் பெரும் கோடீஸ்வரர்களில் எவரும் எதிர்கொள்ளாத பேரிழப்பை ஐரோப்பாவின் முதன்மை கோடீஸ்வரர் சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவின் முதன்மை கோடீஸ்வரரும் பிரான்ஸ் நாட்டவருமான 71 வயது பெர்னார்ட் அர்னால்ட் இந்த கொரோனா காலகட்டத்தில் இதுவரை 30 பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக Bloomberg நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில், உலகின் மூன்றாவது கோடீஸ்வரர் இந்த பெர்னார்ட் அர்னால்ட்.

Louis Vuitton மற்றும் Sephora உள்ளிட்ட சுமார் 70 சொகுசு பிராண்டுகளை உலகமெங்கும் விற்பனை செய்து வரும் இவரது நிறுவனம் கொரோனாவால் 19 சதவீத இழப்பை எதிர்கொண்டுள்ளது.

இது அவரது மொத்த சொத்துமதிப்பில் சுமார் 30 பில்லியன் டொலர்களின் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே மாதம் 6 ஆம் திகதி வரையான ஆய்வுகளின் படி, இந்த ஆண்டில் அமேசான் இணையதள தலைவர் Jeff Bezos ஈட்டிய தொகைக்கு ஈடாக பெர்னார்ட் அர்னால்ட் இழப்பை எதிர்கொண்டுள்ளார் என Bloomberg நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Bloomberg நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அர்னால்டின் தற்போதைய சொத்துமதிப்பு 77 பில்லியன் டொலர்கள் என சரிவை சந்தித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்