எவ்வளவு சொன்னாலும் கேட்காத மக்கள்... இறுதிச்சடங்குக்கு சென்றவர்களால் மீண்டும் பிரான்சில் கொரோனா தொற்று!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள், ஓரிடத்தில் பலர் கூடாதீர்கள் என்று எவ்வளவு வலியுறுத்தினாலும் மக்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

மார்ச் 17 முதல் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த பிரான்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், தென் மேற்கு பிரான்சின் Dordogne என்ற பகுதியில் மீண்டும் புதிதாக சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு ஒன்றில் மக்கள் கூடியதைத் தொடர்ந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

அந்த இறுதிச்சடங்கில் 20 பேர் பங்கேற்றதாக பிரான்ஸ் வானொலி தெரிவித்துள்ளது. 20 பேர் வரை தற்போதைய விதிகளின்படி ஓரிடத்தில் கூடலாம் என்றாலும், இறுதிச்சடங்கிற்குப் பின் ஏராளமானோர் இறந்தவர் வீட்டில் கூடியிருக்கிறார்கள்.

Dordogneஇலுள்ள Vegt என்ற சிறிய கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றவர் என்பது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்தவர்களை சுகாதார அதிகாரிகள் ட்ராக் செய்துள்ளார்கள்.

100 பேரை சோதனை செய்தபோது, அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்