பிரான்ஸ் நாட்டினர் கவலை வேண்டாம்! அவர்களுக்கு பொருந்தாது: பிரித்தானியா அறிவிப்புக்கு பின் முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறியிருந்த பிரான்ஸ் மக்களும் இதில் இருக்கிறார்களா என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, ஊரடங்கு தளர்த்துவது குறித்த புதிய திட்டங்களை, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவித்தார்.

அப்போது அவர் வெளிநாட்டில் இருந்து வரும் விமானப்பயணிகளை பிரித்தானியா விரைவில் தனிமைப்படுத்தும் என்று கூறினார். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படலாம் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் கூறின.

© PA

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொலைப்பேசி வாயிலாக பேசிக் கொண்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதில், கொரோனா நோய்த்தொற்றுகள் இறுதியாக வீழ்ச்சியடையத் தொடங்குவதால், எல்லை தாண்டிய பரவலை தடுப்பதற்கு இரு தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளது.

பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கு எந்தவொரு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையும் பொருந்தாது. இது ஒரு பக்கத்திலிருந்தோ அல்லது மறுபுறத்திலிருந்தோ, ஒரு பரஸ்பர வழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Photo: AFP

அடுத்த வாரங்களில் இந்த ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக ஒரு செயற்குழு அமைக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு மக்கள் அனைவரும் தனிமைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது. ஆனால் அதில், இருந்த சில குழப்பங்களுக்கு பின்னர் ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து பிரான்சிற்கு வரும் மக்களுக்கு மட்டுமே இந்த தனிமைப்படுத்தப்படுவர் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

அதாவது, பிரித்தானியா மற்றும் ஷெங்கன் மண்டலம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து வரும் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரான்சிற்கான அனைத்து பயணங்களும் தற்போது பெரிதும் தடைசெய்யப்பட்டுள்ளன, அத்தியாவசிய பயணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நாட்டின் எல்லை கடக்க சர்வதேச பயண சான்றிதழ் தேவைப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகள் குறைந்தது ஜூன் 15-ஆம் திகதி வரை இருக்கும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்